ஜெய்லரின் வெற்றி; நெல்சனுக்கு போன் போட்டு விஜய் என்ன சொன்னார் தெரியுமா?


பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பின்னர் நெல்சன் இயக்கிய திரைப்படம் தான் ஜெயிலர்.
ரஜினிகாந்த் நாயகனாக நடித்த இத்திரைப்படம் நேற்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது.
பக்கா தலைவர் படமாக எடுத்துள்ளதாக ரஜினி ரசிகர்கள் நெல்சனை பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி உலகளவில் வசூலையும் வாரிக்குவித்து வருகிறது ஜெயிலர் திரைப்படம்.

இந்த நிலையில், ஜெயிலர் படத்திற்கு நன்கு வரவேற்பு கிடைத்து வருவதை அறிந்த நடிகர் விஜய், நெல்சனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நெல்சன் இதற்கு முன்னர் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் திரைப்படம் தோல்வியை சந்தித்தாலும் நெல்சன் மீதுள்ள நட்பின் காரணமாக அவருக்கு போன் போட்டு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறாராம் தளபதி.
அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
(Visited 20 times, 1 visits today)