விஜய் ஆண்டனியின் “நூறு சாமி” படத்தின் புதிய அப்டேட் வெளியானது
விஜய் ஆண்டனியின் “நூறு சாமி” படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிச்சைக்காரன் படத்திற்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகு, இயக்குனர் சசியுடன் நூறு சாமி படத்திற்காக இணைகின்றார் விஜய் ஆண்டனி.
இதை அறிவிக்கும் வகையில், கிராமத்தில் வயலில் அமர்ந்திருக்கும் வகையிலான ஒரு படத்தை விஜய் ஆண்டனி பகிர்ந்துள்ளார்.

பிச்சைக்காரன் படத்தில் இடம்பெற்ற “நூறு சாமிகள் இருந்தாலும்…” என்ற சூப்பர் ஹிட் பாடலில் இருந்தே “நூறு சாமி” என்ற பெயர் புதிய படத்திற்காக எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படம் குறித்து இயக்குனர் சசி தெரிவிக்கையில், இது ஒரு தாய் – மகன் உணர்ச்சிப் பிணைப்பைச் சுற்றியே இருக்கும் என்பதை உறுதிப்படுத்தினார்.
இந்தப் படம் 2026ஆம் ஆண்டு மே 1ஆம் திகதி வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






