பொழுதுபோக்கு

ஸ்ரீகாந்த் கைது : திடுக் தகவலை வெளியிட்ட விஜய் ஆண்டனி

நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் சிக்கி கைதாகி இருப்பது தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது.

ஏற்கனவே மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற திரையுலகிலும் போதைப் பொருள் விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், தற்போது தமிழ் திரையுலகமும் அதில் சிக்கி உள்ளதால், கோலிவுட்டே விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளது.

இந்த நிலையில், மார்கன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக மதுரை சென்றிருந்த நடிகர் விஜய் ஆண்டனியிடம் திரையுலகில் போதைப்பழக்கம் இருப்பது பற்றி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த விஜய் ஆண்டனி, ரொம்ப நாளாகவே அது இருக்கிறது. உலகம் கண்டுபிடித்ததில் இருந்தே இருக்கிறது. இன்னைக்கு நேத்து இல்ல, இப்போ நம் கூட்டத்தில் கூட ஒருவருக்கு போதைப்பழக்கம் இருக்கலாம். பல நாட்களாகவே சினிமாவில் போதைப்பழக்கம் இருக்கிறது.

உதாரணத்திற்கு சிகரெட் பிடிப்பது கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுவும் போதைப்பொருள் தான். அதோடு அடுத்த கட்டம் தான் மற்றவை எல்லாம். இப்போ ஒருவரை பிடித்திருக்கிறார்கள்.

ஆனால் என்ன உண்மை என்பது உறுதியாகவில்லை. போலீஸ் விசாரணையில் உள்ளதால் அவர் குற்றவாளி என உறுதியாக சொல்ல முடியாது என விஜய் ஆண்டனி கூறி இருக்கிறார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!