வெற்றிநடை போடும் விடுதலை – 2… பிரபலங்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
கடந்த 2023 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதன் தொடர்ச்சியாக இப்போது இரண்டாம் பாகம் இன்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வெற்றிமாறனின் படங்கள் தனித்துவமாக இருக்கும் நிலையில் இந்த படமும் இப்போது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
இந்த படத்தில் பிரபலங்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று வெளியாகி இருக்கிறது.
கௌதம் வாசுதேவ் மேனன் டிஎஸ்பி சுனில் மேனனாக விடுதலை 2வில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்காக 30 லட்சம் சம்பளத்தை கௌதம் மேனன் பெற்றிருக்கிறார்.
அடுத்ததாக அனுராக் காஷ்ய விடுதலை 2 படத்திற்காக 60 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார்.
மேலும் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பவானி ஸ்ரீ 40 லட்சம் சம்பளமும், மஞ்சு வாரியர் ஒரு கோடி ரூபாய் சம்பளமும் பெற்று இருக்கின்றனர்.
மஞ்சு வாரியரின் கதாபாத்திரம் இந்த படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
அடுத்ததாக கதாநாயகனாக நடித்துள்ள சூரி 8 கோடி ரூபாய் சம்பளம் பெற்று இருக்கிறார். இவரை விட டபுள் மடங்கு சம்பளத்தை பெருமாள் வாத்தியாராக நடித்துள்ள விஜய் சேதுபதி வாங்கி இருக்கிறார்.
அதாவது விடுதலை 2 படத்திற்காக விஜய் சேதுபதி வாங்கி உள்ள சம்பளம் 15 கோடி ஆகும். மேலும் இந்த படம் முதல் நாளே 50 கோடி வசூலை அள்ளும் என கணிக்கப்பட்டு இருக்கிறது.