பொழுதுபோக்கு

வருது வருது.. விலகு விலகு… தீபாவளிக்கு விடாமுயற்சி வருது….

நடிகர் அஜித் தற்போது குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி படங்களில் அடுத்தடுத்து கவனம் செலுத்தி வருகிறார். குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் துவங்கப்பட்டு முதல் கட்ட ஷூட்டிங் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 24ம் தேதி முதல் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் அஜித் இணைந்துள்ளார்.

அசர்பைஜானில் இந்த படத்தின் சூட்டிங் தொடர்ந்து ஜூலை மாதம் இறுதி வரை திட்டமிடப்பட்டுள்ளது அஜித் மற்றும் ஆரவ் தொடர்பான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த வாரத்தில் அர்ஜுன் மற்றும் திரிஷா இருவரும் இந்த படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் தீபாவளிக்கு கண்டிப்பாக ரிலீசாகும் என்று தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் உறுதிப்படுத்தியுள்ளார்.

படத்தின் சூட்டிங் அசர்பைஜானிலேயே நடத்தப்பட்டு ஒட்டுமொத்த சூட்டிங் நிறைவு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து ஹைதராபாத்தில் சில பேட்ச் வேலைகளையும் மகிழ்திருமேனி 10 நாட்களுக்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் கண்டிப்பாக தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் முதல் பாதி எடிட்டிங் உள்ளிட்ட அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் டப்பிங் வேலைகள் மட்டுமே நடக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்ததாக மீதமுள்ள காட்சிகளுக்கான சூட்டிங் தற்போது நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் தீபாவளி ரிலீசுக்கான அனைத்து வேலைகளையும் அஜித் மற்றும் லைகா நிறுவனம் இருவரும் இணைந்து செயல்படுத்தி வருவதாக தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை கண்டிப்பாக தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய அஜித் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டமாக விடாமுயற்சி படம் கண்டிப்பாக வெளியாகும் என்றும் தனஞ்செயன் உறுதிப்படுத்தியுள்ளார்

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!