பொழுதுபோக்கு

விடாமுயற்சியின் வில்லன்? ஆரவ்வின் போஸ்டர் வெளியானது

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் வில்லன்களாக ஆரவ், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.

நடிகர் அஜித் விடாமுயற்சி மட்டுமின்றி குட் பேட் அக்லி படத்திலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். ஒரு நாளைக்கு சுமார் 21 மணிநேரம் அஜித் பணியாற்றுகிறாராம்.

இன்னும் ஒரு சில வாரங்களில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை முடித்து இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளார்களாம்.

விடாமுயற்சி படத்தின் அப்டேட்டும் வாரா வாரம் வெளிவந்த வண்ணம் உள்ளன. கடந்த வாரம் அஜித்தின் போஸ்டரை வெளியிட்ட படக்குழு, தற்போது விடாமுயற்சி படத்தின் மற்றொரு வில்லனாக ஆரவ்வின் போஸ்டரை வெளியிட்டு உள்ளனர்.

அந்த போஸ்டரில் காரில் இருந்து கூலிங் கிளாஸ் உடன் செம்ம மாஸாக இறங்கும் படியான புகைப்படம் இடம்பெற்று உள்ளது. அந்த போஸ்டருக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன.

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content