அஜித்துக்கு வில்லனாக நடிக்க அர்ஜுன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

2025ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இருந்து வெளிவரவிருக்கும் முதல் பிரம்மாண்ட திரைப்படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதுவரை இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளிவந்த நிலையில், இரண்டுமே மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.
வருகிற 6ஆம் தேதி இப்படம் வெளிவரவிருக்கும் நிலையில், இப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் தொடர்ந்து வெளிவருகிறது.
அந்த வகையில், இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் அர்ஜுனின் சம்பளம் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் அர்ஜுன் ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது.
(Visited 2 times, 1 visits today)