நாளை வெளியாகும் ரஜினிகாந்தின் வேட்டையன் பட அறிவிப்பு…

நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ரித்திகா சிங், பகத் பாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள வேட்டையன் படம் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் சூழலில், படத்தயாரிப்பு நிறுவனமான லைகா, புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
படம் குறித்த முக்கியமான அறிவிப்பு நாளை காலை 10 மணியளவில் வெளியாக உள்ளதாக லைகா அறிவித்துள்ளது.
இது படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 10 தேதி இந்தப்படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்படும் நிலையில், நாளைய தினம் அதை படக்குழுவினர் உறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது.
(Visited 17 times, 1 visits today)