வெனிசுலா விவகாரம் : போர் குற்ற விசாரணையை எதிர்கொள்ளும் பென்டகன்!
வெனிசுலாவில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்தகைய தாக்குதல்கள் முன்னெப்போதையும் விட இலகுவானதாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சியினரிடம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. தற்போது சாத்தியமான போர் குற்றங்கள் தொடர்பான விசாரணையை பென்டகன் எதிர்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக செப்டம்பர் மாதத்திற்கு பிறகு முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் போர் குற்றங்கள் குறித்த சாத்தியமான விசாரணைகளை எதிர்கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது.
வெனிசுலாவை அண்டிய கரீபியன் கடற் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு எதிராக தொடர்ச்சியான தாக்குதல்களை அமெரிக்கா முன்னெடுத்து வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர்.





