பொழுதுபோக்கு

“உடலுறவு காட்சி மட்டும் தான் இல்லை” பிக் பாஸை கிழித்து தொங்கவிட்ட தலைவர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 5 ஆம் திகதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சி, தமிழர் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.

இதனிடையே, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது,

“மாணவ, மாணவிகளை பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி சீரழித்து வருகிறது. தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்க நெறிமுறைகள் சீரழிகிறது.

தமிழ் சமூகம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். அண்மையில் ஒளிபரப்பிய காட்சிகள் எல்லாம் குடும்பத்தினரோடும், குழந்தைகளோடும் பார்க்க முடியாத அருவருக்கத்தக்கவை.

படுக்கை அறை காட்சிகளும், ஆணும், பெண்ணும் முத்தமிடும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அதில், உடலுறவு காட்சியை மட்டும் தான் அவர்கள் ஒளிபரப்பவில்லை.

இத்தகைய அநாகரிகமான நிகழ்ச்சியை நடத்தி தான் பணம் சம்பாதிக்க வேண்டுமா? என்ற கேள்வி எனது மனதில் எழுகிறது.

இது தொடர்பாக அறிக்கைகளும் வெளியிட்டுள்ளேன். மேலும், சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானமும் அளித்துள்ளேன்.

கடந்த 2 நாள்களுக்கு முன்பு தமிழக அரசுக்கும், முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறேன். ஆனால், இதுவரை தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.

அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், அனைத்து தாய்மார்களையும் திரட்டி பிக்பாஸ் திரையரங்கத்திலும், விஜய் டிவி நிறுவனம் முன்பும் போராட்டம் நடத்தப்படும். இதற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

(Visited 5 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்