ராஜமவுலி – மகேஷ் பாபு இணையும் ‘வாரணாசி’ படத்தின் டீசர் வெளியானது…
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
மகேஷ் பாபுவை வைத்து ராஜமவுலி இயக்கும் புதிய படத்துக்கு ‘வாரணாசி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார்.
படத்தில் பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார்.
இந்தப் படம் 2027-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 2 visits today)





