வட அமெரிக்கா

ஏப்பம் விட்டு கின்னஸ் உலகச் சாதனை படைத்த பெண்

அமெரிக்காவின் மேரிலேண்ட் நகரில் ஏப்பம் விட்டு Kimberly Winter என்ற பெண் கின்னஸ் உலகச் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இத்தாலியின் எலிசா கெக்னொனி (Elisa Cagnoni) 2009ஆம் ஆண்டு அத்தகைய சாதனையைப் படைத்திருந்தார்.

கலக்கும் சாதனம், சில வகை மோட்டார்சைக்கிள்கள் ஆகியவற்றை விட கிம்பர்லியின் ஏப்பம் மிகச் சத்தமாக இருந்ததாக கின்னஸ் உலகச் சாதனை அமைப்பு அதன் இணையப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது.

சாதனை செய்யத் தயாராவதற்கு முன், கிம்பர்லி காலை உணவுக்குப் பிறகு காப்பியும் பீரும் அருந்தியுள்ளார்.

சத்தமாக ஏப்பம் விடும் தன்மையைச் சிறு வயதிலிருந்தே கண்டறிந்ததாகவும் வயது ஆகஆக சத்தம் அதிகரித்ததாகவும் அவர் சொன்னார்.

பொது இடங்களில் கிம்பர்லி ஏப்பம் விடுவது சிலருக்கு அதிர்ச்சியளிக்கலாம்.

ஆனால், ஏப்பம் விடும் காணொளிகளை TikTok, Facebook ஆகிய தளங்களில் பதிவேற்றிய அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

கிம்பர்லி கின்னஸ் உலகச் சாதனை படைக்க ஊக்கமளித்ததே அவரது ரசிகர்கள்தான் என குறிப்பிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!