அமெரிக்க வரிகளால் உலகம் மீண்டும் பழைய நிலைக்கு முடியாத அபாயம்

அமெரிக்காவின் வர்த்தக வரியால் ஏற்படும் தாக்கம் தற்காலிகமானது அல்ல என மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
உலகம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பாது என அவர் கூறியுள்ளார்.
வர்த்தகம், பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தவரை ஒரு நடவடிக்கை எடுத்ததும் உடனே அதிலிருந்து பின்வாங்க முடியாது; அதற்கான விளைவுகள் இருந்தே தீரும் என்று அவர் குறிப்பிட்டார்.
உலக வர்த்தக ஒழுங்கில் ஏற்படும் மாற்றங்கள் ஏற்கனவே உள்ள கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கும். சிங்கப்பூர் பொருளாதார மன்றத்தின் கலந்துரையாடலில் அவர் பேசினார்.
உலக வர்த்தக அமைப்பின் கட்டமைப்பிலும் இணைந்து பணியாற்ற முடியும் என லீ கூறினார்.
எல்லா நாடுகளும் ஒத்துழைப்பதில்லை. சில நாடுகளுக்குச் சங்கடங்கள் இருக்கலாம். அவற்றுக்கு அது சரி. ஆனால் மீதமுள்ள நாடுகள் முன்னோக்கிச் செல்லலாம் என்றார் அவர்.
சில அம்சங்களில் முன்னேற்றத்தைச் சுட்டிய லீ மேலும் பல அம்சங்களுக்கு அது விரிவடையும் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.