வளைகுடா நாடுகள் நோக்கி பயணிக்கும் அமெரிக்க கப்பல்கள் – ஈரானுக்கு 02 நிபந்தனை!
வளைகுடா நாட்டில் அதிகரித்து வரும் பதற்றங்களை தவிர்க்க ஈரான் இரண்டு விடயங்களை செய்ய வேண்டும் என ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
“முதலாவது, அணு ஆயுதம் வேண்டாம். இரண்டாவது, எதிர்ப்பாளர்களைக் கொல்வதை நிறுத்துங்கள்,” என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.
“எங்களிடம் இப்போது ஈரானுக்குப் பயணிக்கும் மிகப் பெரிய, மிகவும் சக்திவாய்ந்த கப்பல்கள் ஏராளமாக உள்ளன, அவற்றை நாம் பயன்படுத்த வேண்டியதில்லை என்றால் நன்றாக இருக்கும் என்றும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அணு ஆயுதத் திட்டத்தில் ஒரு ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்கா பல வாரங்களாக ஈரானுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலையில் ட்ரம்பின் சமீபத்திய கருத்துக்கள் வந்துள்ளன.
தொடர்புடைய செய்தி
அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதற்றங்கள் : துருக்கியின் உதவியை நாடும் தெஹ்ரான்!




