செய்தி வட அமெரிக்கா

வியட்நாமுக்கு போர்க்கப்பலை அனுப்பியது அமெரிக்கா

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில், அணுசக்தியில் இயங்கும் விமானங்களை ஏற்றிச் செல்லக்கூடிய அமெரிக்காவுக்கு சொந்தமான போர்க்கப்பல் நாளை வியட்நாமின் துறைமுக நகரான டானாங்கை வந்தடைய உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வியட்நாமை வந்தடையும் ரொனால்ட் ரீகன் கப்பல் (USS Ronald Reagan) இம்மாதம் 30ஆம் திகதி வரை Danang இல் தங்கியிருக்கும் என வியட்நாம் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வியட்நாம் போர் முடிவடைந்த பின்னர் அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல் வியட்நாமிற்கு மேற்கொள்ளும் 03வது விஜயமாக இந்தக் கப்பலின் விஜயம் கருதப்படுகிறது.

1975 இல் வியட்நாம் போர் முடிவடைந்த 25 வது ஆண்டு நிறைவையொட்டி, “USS Theodore Roosevelt” 2020 இல் வியட்நாமிற்கு விஜயம் செய்தது.

தென்சீனக் கடல் எல்லை தொடர்பாக வியட்நாம் மற்றும் சீன நிர்வாகத்துக்கு இடையே அடிக்கடி சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், வியட்நாமுடனான முறையான உறவை மேம்படுத்த அமெரிக்கா முயற்சித்து வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதற்கிடையில், தைவானின் பாதுகாப்பு அமைச்சகம், சீன விமானம் தாங்கி கப்பலான “ஷான்டாங்” மற்றும் துணைக் கப்பல்கள் குழு கடந்த புதன்கிழமை தைவான் ஜலசந்தி வழியாக தெற்கு நோக்கி பயணித்ததாக அறிவித்தது.

(Visited 5 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி