அமெரிக்காவில் முடிவுக்கு வந்த நிதி முடக்கம்! செனட் சபை அனுமதி
அமெரிக்காவில் பல நாட்களாக நீடித்து வந்த நிதி முடக்கம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக செனட் சபை அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நிதி ஒதுக்கீடுக்கான அனுமதியை வழங்க செனட் சபை உறுப்பினர்கள் மறுத்திருந்தனர்.
இதன் காரணமாக அமெரிக்காவில் பல நாட்களாக நிர்வாக முடக்கம் நீடித்து வந்த நிலையில் இன்று முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிதி முடக்கத்தால் பல இலட்சக்கணக்கான அமெரிக்கர்கள் சம்பளத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக அமெரிக்காவின் 40-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் பணியாளர்கள் வேலைக்கு வருவதைத் தவிர்த்தனர்.
இதனால், பெருமளவு விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 5 times, 5 visits today)




