வெனிசுலாவுடன் தொடர்புடைய மற்றொரு எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா
வெனிசுலாவுடன்(Venezuela) தொடர்புடைய மேலும் ஒரு எண்ணெய் டேங்கர் கப்பலை கரீபியனில்(Caribbean) அமெரிக்கா(America) கைப்பற்றியுள்ளது.
இது வெனிசுலாவுக்கு கப்பல்கள் செல்வதையோ அல்லது வெளியேறுவதையோ தடுக்கும் நோக்கில் சமீபத்திய வாரங்களில் கைது செய்யப்பட்ட ஐந்தாவது கப்பலாகும்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட சமீபத்திய கப்பல் ஒலினா(Olina) ஆகும், இது தடை செய்யப்பட்ட எண்ணெயை எடுத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு டேங்கர் கப்பல் என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோயம்(Christie Noam) குறிப்பிட்டுள்ளார்
இந்நிலையில், கப்பல் ஏன் குறிவைக்கப்பட்டது அல்லது மீறல்கள் குறித்து கூடுதல் விவரங்களை வழங்கவில்லை.
ரஷ்ய(Russia) கொடியுடன் கூடிய மரினேரா(Marinera) எண்ணெய் கப்பல் உட்பட, இரண்டு எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் கைப்பற்றிய இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை வந்துள்ளது
தொடர்புடைய செய்தி
ஒரே நேரத்தில் இரு பலம்பொருந்திய நாடுகளை பகைத்துக்கொள்ளும் அமெரிக்கா!





