ஈராக்கில் இருந்து முழுமையாக வெளியேறிய அமெரிக்க இராணுவம்!
மேற்கு ஈராக்கில் உள்ள ஐன் அல்-அசாத் விமானத் தளத்திலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியுள்ளதாக ஈராக்கிய அதிகாரிகள் நேற்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஈராக்கில் இஸ்லாமிய அரசு குழுவை எதிர்த்துப் போராடும் அமெரிக்கத் தலைமையிலான பணியை செப்டம்பர் 2025 க்குள் முடிக்க வொஷிங்டனுக்கும் – பக்தாத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டது.
கடந்த 2024 ஆம் ஆண்டு எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஈராக்கில் நிலைக்கொண்டுள்ள அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும்.
அசல் திட்டத்தின்படி அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றாலும் சிரியாவில் ஏற்பட்ட முன்னேற்றங்கள்” 250 முதல் 350 ஆலோசகர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களைக் கொண்ட ஒரு சிறிய பிரிவை தற்காலிகமாக தக்கவைத்துக் கொள்ள வழிவகுத்துள்ளது.
இதனை ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி (Mohammed Shia al-Sudani) உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அனைத்து அமெரிக்கப் பணியாளர்களும் முழுமையாக வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் வெளியேறியதை தொடர்ந்து ஈராக்கிய இராணுவத் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் அமீர் ரஷீத் யாரல்லா (Abdul Amir Rashid Yarallah ) ஈராக்கிய இராணுவத்தின் முழு கட்டுப்பாட்டையும் மேற்பார்வையிட்டார்.





