சிரியாவில் மற்றொரு சுற்று தாக்குதல் – அல்-கொய்தாவுடன் தொடர்புடைய தலைவர் மரணம்!
வடமேற்கு சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், அல்-கொய்தாவுடன் தொடர்புடைய “அனுபவம் வாய்ந்த” தலைவரான பிலால் ஹசன் அல்-ஜாசிம் (Bilal Hasan al-Jasim) கொலை செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தினர் இன்று அறிவித்துள்ளனர்.
டிசம்பர் 13 அன்று நடந்த தாக்குதலுடன் அல்-ஜாசிம் “நேரடியாக தொடர்புடையவர் எனவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
டிசம்பர் மாதம் இடம்பெற்ற தாக்குதலை தொடர்ந்து அமெரிக்கப் படைகள் மூன்றாவது சுற்று பதிலடி நடவடிக்கையாக இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
அமெரிக்கப் படைகளை குறிவைக்கும் பயங்கரவாதிகளைத் துரத்துவதில் அந்நாடு கொண்டிருக்கும் உறுதியை இந்த தாக்குதல் சம்பவம் அடிகோடிட்டுக் காட்டுவதாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது.





