இந்தியா

அமெரிக்காவின் ஒப்பந்தம் இந்தியாவுக்கான வலை: எதிரணிகள் போராட்டம்!

அமெரிக்காவுடன் கைச்சாத்திடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான உத்தேச வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது என ட்ரம்ப் சுட்டிக்காட்டி இருந்தார்.

எனினும், இந்த ஒப்பந்தம் அமெரிக்க வலையில் இந்தியாவை சிக்க வைக்கக்கூடியது என எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடாளுமன்ற வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடரின் 11-வது நாளான இன்று, மேற்படி ஒப்பந்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

அதேவேளை, நாடாளுமன்ற மக்களவையில் நேற்று உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.

Dila

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!