ஈரானில் இராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக அமெரிக்கா அறிவிப்பு
ஈரானில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் “பயங்கரவாதிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அரக்கி Araqchi இதனைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா, போராட்டக்காரர்களையும் பாதுகாப்புப் படையினரையும் இலக்கு வைத்து வெளிநாட்டு தலையீட்டை திட்டமிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ட்ரம்ப், ஏற்கனவே ஈரானில் தலையீடு செய்யும் வாய்ப்பு குறித்து அச்சுறுத்தியுள்ள நிலையில் அமெரிக்கா நிலைமையை கவனித்து வருவதாகவும் ஈரானின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் படையினர்கள் உட்பட இரு வாரமாக இடம்பெற்று வரும் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் நினைவாக மூன்று நாட்கள் தேசிய துக்க தினத்தை ஈரான் அரசு அறிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி, கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் தனிமனித சுதந்திரப் பறிப்பு ஆகியவற்றிற்கு எதிராகத் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டங்களால் இதுவரை 100 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





