US : மியாமியில் முதல் முறையாக மேயர் பதவிக்கு பெண் ஒருவர் நியமனம்!
ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி நகரத்தில் இடம்பெற்ற மேயரை தெரிவு செய்வதற்கான தேர்தலில் முதல் முறையாக பெண் ஒருவர் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளார்.
மியாமி மேயர் போட்டியில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எய்லீன் ஹிக்கின்ஸ் (Eileen Higgins) என்ற பெண் வேட்பாளர், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட எமிலியோ கோன்சலஸை (Emilio Gonzalez) தோற்கடித்து வெற்றியீட்டியுள்ளார்.
இது 2026 இடைத்தேர்தலுக்கு முன்னதாக ஜனநாயகக் கட்சியினருக்கு ஒரு முக்கியமான ஊக்கத்தை அளிக்கிறது.
குடியேற்றம், மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமான சொல்லாட்சியை விமர்சித்தல் மற்றும் மலிவு விலை வீட்டுவசதிக்கான தீர்வுகளை முன்மொழிதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை அவர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




