கோர விபத்தில் சிக்கிய பிரபல நடிகை… பறிபோனது உயிர்
தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் பல திரைப்படத்தில் நடித்துள்ள நடிகையின் கார் காட்டுப்பாட்டை இழந்ததால், மெட்ரோ பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் மீது வேகமாக மோதியதில், அந்த தொழிலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதில் காரில் இருந்த நடிகை நூழையில் உயிர் தப்பி உள்ளார்.
மராட்டிய நடிகையான ஊர்மிளா கோத்தாரே, துனியாதாரி, சுபா மங்கள் சாவதன், மாலா ஆய் வ்ஹாய்ச்சி, தி சத்யா கே கார்டே போன்ற மராத்திய படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் மராட்டி மொழிப்படங்களில் மட்டுமில்லாமல், இந்தி படத்திலும், 2014ஆம் ஆண்டு வெளியான வெல்கம் ஒபாமா படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார்.
நடிகை 2011ஆம் ஆண்டு, ‘சுப மங்கள் சாவதான்’ படத்தில் நடித்த போது, இப்படத்தின் இயக்குநரும் நடிகருமான ஆதிநாத் கோத்தாரேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது மாமனார் மகேஷ் கோத்தாரே மராத்தி திரையுலகிலும் ஒரு முக்கிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.
இருவருக்கும் ஜிஜா கோத்தாரே என்ற மகள் உள்ளார்.
இவர் சனிக்கிழமையன்று நேற்று படப்பிடிப்பை முடித்துவிட்டு, மும்பையில் உள்ள கண்டிவாலியில் காரில் வந்து கொண்டிருந்த போது கார் விபத்துக்குள்ளானது.
நடிகையின் கார் ஓட்டுநர் நிதானமாக காரை ஓட்டிவந்த போதும், கார் கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் மெட்ரோ பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் மீது மோதியது. இதில், ஒரு மெட்ரோ ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.