இலங்கையில் சீரற்ற காலநிலை – சுகாதாரப் பிரிவினர் விடுத்த எச்சரிக்கை

இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் டெங்கு நோய் வேகமாகப் பரவும் அபாயம் இருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால் பொது மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் நாட்டில் 39,401 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு டெங்குவால் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என நிபுணர் தெரிவித்தார்.
ஒக்டோபர் மாதத்தில் இதுவரை 431 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
மொத்த டெங்கு நோயாளிகளில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
(Visited 6 times, 1 visits today)