பங்களாதேஷில் அமைதியின்மை – நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!
பங்களாதேஷின் உச்ச நீதிமன்றம் அரசாங்க வேலைகளுக்கான இடஒதுக்கீட்டில் பெரும்பாலானவற்றை ரத்து செய்துள்ளது.
1971 ஆம் ஆண்டில் பங்களாதேஷின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் உறவினர்களுக்கு அரச தொழில்களில் 30 சதவீதம் ஒதுக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் முதல் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் அதன்போது ஏற்பட்ட மோதல்களில் 133 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் உறவினர்களுக்கான ஒதுக்கீட்டை 5 சதவீதமாகக் குறைத்துள்ள பங்களாதேஷ் உயர்நீதிமன்றம், 93 சதவீதமான தொழில்வாய்ப்புகள் தகைமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
கடந்த மாதம், உயர்நீதிமன்றம் அறிவித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் இந்த எதிர்ப்பை வழங்கியுள்ளது.
“உயர் நீதிமன்ற தீர்ப்பு சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.” என்று அட்டர்னி ஜெனரல் ஏஎம் அமீன் உதின் கூறியுள்ளார்.