ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்த மொரீஷியஸ் பல்கலைக்கழகம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று மொரீஷியஸ் சென்றடைந்தார்.
இந்நிலையில், மொரீஷியஸ் நாட்டின் தேசிய தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக திரவுபதி முர்மு பங்கேற்றார்.
மொரீஷியஸ் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு மதிப்புமிகு டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மொரீஷியஸ் இளைஞர்கள், புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் இந்திய சமூகத்தினர் பங்கேற்கும் கூட்டத்திலும் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.
2000-ம் ஆண்டு முதல் மொரீஷியஸ் நாட்டின் தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் 6-வது இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை ஜனாதிபதி முர்மு பெற்றார். ஜனாதிபதியின் இந்த அரசுமுறை பயணம் இந்தியாவிற்கும் மொரீஷியசுக்கும் இடையிலான நீண்டகால நட்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.