ஸ்பெயின் ரயில் விபத்து தொடர்பில் வெளிப்படையான விசாரணைகளை கோரும் தொழிற்சங்கம்!
ஸ்பெயினில் இடம்பெற்ற கோர ரயில் விபத்து தொடர்பாக வெளிப்படையான விசாரணை தேவை என போக்குவரத்து தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
அதிவேக மோதலுக்கான காரணங்களை “ஆழமாக” விசாரிக்க வேண்டியது “அவசியம்” என்று ஸ்பெயின் போக்குவரத்து தொழிற்சங்கம் கூறுகிறது.
இது தொடர்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தொடர்புடைய பொறுப்புகளைத் தீர்மானிக்க” விசாரணையில் “முழு வெளிப்படைத்தன்மை மற்றும் கடுமை” தேவை என வலியுறுத்தியுள்ளது.
இதுபோன்ற விபத்து மீண்டும் நடக்காமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்” எடுக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேற்படி விபத்து தொடர்பில் நாட்டின் ரயில்வே விபத்து விசாரணை ஆணையத்தால் சிவில் விசாரணை மேற்கொள்ளப்படுவதுடன், சிவில் காவலரால் குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி





