காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் அறிவிக்குமாறு இஸ்ரேலை வலியுறுத்தும் ஐநா தீர்மானம்
காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் அறிவிக்க இஸ்ரேலை வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐநா.பாதுகாப்பு கவுன்சில் இது தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஹமாஸ் தீவிரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ள ஐநா.பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரஸ், தீர்மானத்தை உடனடியாக அமல்படுத்தத் தவறினால் மன்னிக்க முடியாத குற்றமாகும் எனத் தெரிவித்துள்ளார்.
(Visited 15 times, 1 visits today)





