பத்து லட்சம் ரோஹிஞ்சா அகதிகளுக்கு உணவு விநியோகத்தை நிறுத்தியது ஐ.நா
ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் உலக உணவுத் திட்டம், மியான்மரில் உள்ள 1 மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகளுக்கு உணவு விநியோகத்தை நிறுத்தி வைக்கிறது.
ஏப்ரல் மாதத்திலிருந்து உணவு விநியோகத்திற்கு நிதி இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகளும் உலக உணவுத் திட்டத்திற்கான நிதியைக் குறைத்து, உணவு விநியோகத்தை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளன.
மாற்று நிதி திரட்டும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில், வங்கதேசத்திற்கு விஜயம் செய்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், மனிதாபிமான உதவிகளை ரத்து செய்வது ஒரு குற்றம் என்று பதிலளித்தார்.





