ஜெனிவாவில் ஆரம்பமாகும் ஐ.நா கூட்டத்தொடர் : இலங்கை குறித்து ஆராயப்படும்!
ஐ.நா மனித உரிமை பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் இன்று (11.09) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
பேரவையின் தலைவர் வக்லெவ் பலெக்கின் தலைமையில் ஆரம்பமாகும் இந்த கூட்டத்தொடர் ஒரு மாதங்களுக்கு நடைபெறவுள்ளதுடன், கூட்டத்தொடரின் ஆரம்ப உரையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் ஆற்றவுள்ளார்.
இதன்போது இலங்கை தொடர்பாக முன்பு கொண்டுவரப்பட்ட 51/1 தீர்மானத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயப்படவுள்ளதுடன், நாட்டின் தற்போதைய மனித உரிமை நிலைவரம் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குறித்த கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக இலங்கையில் இருந்து சில தலைவர்கள் ஜெனீவா சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
(Visited 7 times, 1 visits today)