உலகம் செய்தி

மத்திய கிழக்கு போர்: சிறப்பு தூதுவரை நியமித்தது ஐ.நா.!

மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஓர் அங்கமாக ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ், பிரெஞ்சு தூதர் ஜீன் அர்னால்ட்டை French diplomat Jean Arnault தனது தனிப்பட்ட தூதராக நியமித்துள்ளார்.

30 வருடங்களுக்கு மேலாக சர்வதேச அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள அர்னால்ட், போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரச் சீரழிவு குறித்து நேரடி ஆய்வுகளை மேற்கொள்வார்.

ஈரான் மீதான போர் உலகளாவிய எரிசக்தி மற்றும் உர விநியோகத்தைப் பாதித்துள்ளதால், இந்தப் பதற்றம் மேலும் தீவிரமடைவதைத் தடுக்க ஐ.நா முயற்சித்துவருகின்றது.

குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் ஏற்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பு அச்சங்களுக்கு தீர்வு காண்பது இவரது முக்கிய பணியாக இருக்கும்.

பல்வேறு கண்டங்களில் அமைதிப் பணிகளை ஒருங்கிணைத்த இவரது அனுபவம், தற்போதைய சர்வதேச நெருக்கடியை தணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!