இலங்கை செய்தி

மனிதாபிமான திட்டத்திற்கு 22.4 மில்லியன் டொலர் நிதியுதவி – ஐ.நா. அறிவிப்பு

இலங்கைக்கான மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்திற்கு இதுவரை 22.4 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி கிடைத்துள்ளதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கமைய, கடந்த டிசம்பர் மாதம் முதல் 2026 ஏப்ரல் வரையான காலப்பகுதிக்குள் டிட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 35.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை எதிர்பார்க்கும் மனிதாபிமான முன்னுரிமைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கமைய, ஐக்கிய நாடுகள் சபைக்கு அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மன், ஜப்பான், நியூசிலாந்து, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நாடுகளிடமிருந்து நிதியுதவி கிடைத்துள்ளது.

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் அண்மைய தரவுகளின்படி, 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இதுவரை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 216,000 இற்கும் மேற்பட்ட நபர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் கல்வி, உணவு, போசணை, பாதுகாப்பு, சுகாதாரம், தங்குமிடம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

டிட்வா புயல்  நாட்டின் 25 மாவட்டங்களிலும் உள்ள சுமார் 2.2 மில்லியன் மக்களைப் பாதித்தது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்படி, 2025 டிசம்பர் 29 ஆம் திகதியாகும் போது புயல் காரணமாக 646 பேர் உயிரிழந்துள்ளதுடன், 173 பேர் காணாமற்போயுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு தேவையான திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றை அனர்த்த முகாமைத்துவ நிலையம், அமைச்சுக்கள், மாவட்ட மற்றும் பிரதேச அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றன.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!