ஜப்பானில் சுமோ சாம்பியனான உக்ரேனிய அகதி
ஒரு உக்ரேனிய அகதி, தனது நாட்டிலிருந்து ஜப்பான் வந்து பிரபல சுமோ(sumo) போட்டியை வென்ற முதல் நபராக மாறியுள்ளார்.
அயோனிஷிகி(Aonishiki) என்ற சுமோ பெயரால் அறியப்படும் டேனிலோ யாவ்ஹுசிஷின்(Danylo Yavhusishyn), தனது நாட்டின் மீது ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு 2022ம் ஆண்டு 18 வயதில் ஜப்பான் வந்தடைந்துள்ளார்.
இப்போது 21 வயதாகும் அவர், மதிப்புமிக்க பேரரசர் கோப்பையை வென்ற முதல் உக்ரேனியரும், கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளில் இந்த கோப்பை வென்ற முதல் ஐரோப்பியரும் ஆவார்.
இந்நிலையில், வெற்றிக்கு பிறகு இது வெறும் ஆரம்பம் மட்டுமே” என்று குறிப்பிட்டுள்ளார்.
சுமோவில் முதல் பிரிவில் உள்ள இரண்டாவது உக்ரேனிய வீரர் அயோனிஷிகி ஆவார். ஜூடோ(judo) மற்றும் ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தையும்(freestyle wrestling) பயிற்சி செய்த பிறகு ஏழு வயதில் அவர் முதன்முதலில் சுமோவை ஆரம்பித்துள்ளார்.
அயோனிஷிகி என்ற பெயரில் “நீலம்” என்பதற்கான ஜப்பானிய எழுத்து உள்ளது. இது உக்ரேனியக் கொடியைக் குறிக்கிறது.





