உதயநிதியை ”Drug உதயநிதி” என்றுதான் அழைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்!
உதயநிதி ஸ்டாலின் ஜாபர் சாதிக்குடன் உறவு வைத்து இருப்பதால் “Drug உதயநிதி” என்று தான் அழைக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நாளை கோவையில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து கோவை மாவட்டம் பாஜக அலுவலகத்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்தித்து பேசினார்.
அப்போது பேசியவர், பிரதமர் மோடி கோவை வருகையொட்டி பொதுமக்கள் மிகுந்த வரவேற்பாக உள்ளனர். நாளை 5.30 மணிக்கு ரோடு ஷோ தொடங்க உள்ளது. சாய்பாபா காலணி அருகே இருந்து தொடங்கி ஆர்.எஸ் புரம் தபால் நிலையம் அருகே நிறைவடைய உள்ளது.
கலை நிகழ்ச்சிகள் மற்றும் இந்த பகுதியில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்கள் கண்காட்சியும், பிரதமர் வழிநெடுகிலும் சிறு மேடையில் சமுதாய தலைவர்கள் உட்பட முக்கியமான நபர்களை அமர வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் வந்து பிரதமர் மோடியே பார்க்கலாம். சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கபட உள்ளது.
திமுக, காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் திகதி அறிவிப்பினை அரசியல் செய்து விமர்சனம் செய்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் மீது பழி போடுவது அவர்களின் தோல்வியை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.
பாஜக ஆட்சி செய்கின்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிகமான திட்டங்களும், யு.பி.ஏ, அரசை விட அதிக நிதியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
பிரதமர் மோடியை 28 பைசா என்று அழைக்கும் உதயநிதியை ஜாபர் சாதிக்குடன் உறவு வைத்திருக்கும் Drug உதயநிதி என்று தான் அழைக்க வேண்டும். இண்டியா கூட்டணி சுய நலத்துக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி என்று விமர்சனம் வானதி சீனிவாசன் செய்தார்.
18-ம் தேதி கோவையில் ரோடு ஷோ முடித்துவிட்டு 19-ம் தேதி சேலத்தில் பொது கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டு பல்வேறு அரசியல் கட்சியினரை சந்திக்கிறார்.
ஒரே நாடு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று கமலஹாசன் கருத்து குறித்தான கேள்விக்கு – கமலஹாசன் புரிதல் அறைக்குறைவானது. ஒரே நாடு ஒரே தேர்தல் ஜனநாயக முறைப்படி பாதுகாப்பாக நடத்துவது என்றால் அடுத்த அடுத்த கட்டமாக தான் தேர்தல் நடத்த முடியும்.
தேர்தல் செலவின கணக்குகள் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு வராது இது முழுக்க முழுக்க பாஜக சார்பில் நடத்தப்படுகிறது. பொள்ளாச்சி பொது கூட்டத்தில் அரசாங்க நிகழ்ச்சியில் அரசியல் நிகழ்ச்சியாக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
பிரதமர் மோடி கட்சி நிகழ்ச்சிகாக 30% மும், மக்களுக்கு திட்டங்களை கோடி கணக்கில் கொடுப்பதற்காக 70% தமிழகம் வந்துள்ளர்.
கேலோ இந்தியா தேசிய விளையாட்டு போட்டிகளில் திமுக அரசு மோடியை தூக்க விழாவிற்கு அழைத்தது ஆனால் தற்பொழுது மோடியின் அதிகமாக தமிழகத்திற்கு வருகிறார் என்று அவர்களே கேள்வி எழுப்புகின்றனர்.
நடைமுறை எதார்த்தம் புரியாதவர், புரிந்துகொள்ள முயலாதவர் கமலஹாசன், கட்சி நடத்துகிற நிகழ்ச்சி, வேட்பாளர் தாக்கல் செய்த பின்பே அவரின் கணக்கில் வரும்
பிரதமர் நிகழ்ச்சி தேர்தல் கணக்கில் வராது.
தேர்தல் பாத்திரங்கள் தொடர்பாக நாங்கள் பட்டியல் கொடுக்க தயார் என மத்திய அமைச்சர் சொல்லியுள்ளார், இங்குள்ளவர்கள் 3 ஆண்டுகள் ஆட்சியில் இவ்வளவு வாங்கி இருக்கிறீர்கள்? சொல்ல முடியுமா? தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக நிறைய வதந்திகள் பரவி வருகிறது. பாக்கிஸ்தான் இருந்து பெறப்படத்தாக சொல்லப்படுவது வதங்தியாக இருக்கும், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே தேர்தல் பத்திரங்கள் கொடுக்க முடியும்.
அதானி, அம்பானி அரசை நடத்தி வருவதாக குற்றச்சாட்டு சொல்லி வந்த நிலையில், அந்த நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களில் இல்லாதது ஏமாற்றம் அளித்திருக்கும்.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எங்களை கேள்வி கேட்கும் கட்சிகளை திருப்பி சொல்கின்ற கட்சியில் கேட்டால் பதில் இல்லை.