தெற்கு எகிப்தில் இரு ரயில்கள் மோதி விபத்து : பலர் காயம்!
தெற்கு எகிப்தில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கெய்ரோவிற்கு தெற்கே 270 கிலோமீட்டர் (சுமார் 168 மைல்) தொலைவில் உள்ள மின்யா மாகாணத்தில் இந்த மோதல் நிகழ்ந்ததாக ரயில்வே நிர்வாகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறித்த விபத்தில் இரண்டு ரயில் பெட்டிகள் அருகிலுள்ள நீர்வழிப்பாதையில் விழுந்ததாக கூறப்படுகிறது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 5 times, 1 visits today)