இந்தியாவில் ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது!
இந்தியாவில் தற்கொலைக்குண்டு தாக்குதல்களுக்கு பயிற்சி பெற்று வந்ததாக கூறப்படும் இருவர் டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் டெல்லியைச் சேர்ந்தவர், மற்றவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் அட்னான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை கைது செய்யப்பட்ட இருவருக்கும் பாகிஸ்தானில் இயங்கிவரும் இஸ்லாமிய பிரிவினைவாத குழுவினருக்கும் இடையில் தொடர்பிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த இருவரிடமும் தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெகடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





