பொழுதுபோக்கு

என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துட்டு… விஜய்யின் கட்சியால் பெண்ணுக்கு இந்த நிலையா?

விஜய் ரசிகர் மன்றத்தால் தன் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்ததாக ஒரு பெண் தவெக நிகழ்ச்சியின்போது கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் ரசிகர்கள் மன்றம் அமைக்கப்பட்டு, அதிலிருந்து விஜய் மக்கள் இயக்கமாகப் பதிவு செய்யப்பட்டு, மக்களுக்கு சேவைகளும், உதவிகளும், நலத்திட்ட உதவிகளும் செய்யப்பட்டு வந்தன.

ஆனால், சில ரசிகர்கள் விரும்பத்தகாத விசயங்களில் ஈடுபவதும்கூட அவர்களுக்கே விபரீதத்தில் முடிவதும் உண்டு. அந்த வகையில் விஜய் ரசிகர் மன்றதால் பாதிக்கப்பட்டு நடுத்தெருவுக்கு வந்ததாக ஒரு பெண் தவெக நிகழ்ச்சியின்போது கூறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

20 லட்சம் ரூபாய் முதலை விட்டுவிட்டு என் மகன் தெருவில் நிற்கிறான்’ என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், விஜய் ரசிகர் மன்றத்தால் அப்பெண்ணின் குடும்பத்தார் எப்படி பாதிக்கப்பட்டனர் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

அப்பெண்ணிடம் புஸ்ஸி ஆனந்த், நீங்கள் பேசுவதை எழுதிக் கொடுங்கள் என்று கூறினார். பின், தான் அடுத்து, தஞ்சாவூர் போகனும், அடுத்து, திருவாரூர், திருச்சிக்கும் போக வேண்டும் என்று கூறவே, அப்பெண்ணை தவெக நிர்வாகிகள் சமாதானம் செய்த முயன்றனர்.

ஆனால், அப்பெண் தான் கூற வந்ததை அத்தனை நிர்வாகிகளின் முன்பு துணிச்சலுடன் கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாதிக்கப்பட்ட இப்பெண்ணின் குடும்பத்தாருக்கு தவெக தலைவர் விஜய் நிச்சயம் உதவி செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

https://x.com/Gypsy_1809/status/1840629238304485855

(Visited 15 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!