பொழுதுபோக்கு

த.வெ.க மாநாடு : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

தவெக மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், மற்றொரு இளைஞரும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை உண்டுபண்ணியிருக்கிறது.

ஒரே நாளில் 2 இளைஞர்களின் பலியானது, தவெகவுக்குள்ளும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

தவெக தலைவர் விஜய் தலைமையில் மதுரையில் 2வது மாநாடு நேற்றைய தினம் நடைபெற்றது. சுமார் 506 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடு, நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு சுமார் 8 மணி வரை மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மாநாட்டு திடலுக்கு நேற்று அதிகாலையில் இருந்தே தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.

60க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் மயங்கி விழுந்தனர்.. இதையடுத்து, அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மாநாட்டுத் திடலின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ உதவி முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே, தவெக மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் இருந்து மதுரைக்கு வந்த பிரபாகரன் (வயது 33) என்ற இளைஞர் மதுரை வந்துகொண்டிருந்தார். சக்கிமங்கலம் அருகே இயற்கை உபாதை கழிக்க வாகனத்திலிருந்து கீழே இறங்கிய போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதுபோலவே, மாநாட்டிற்கு வந்த மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளார்.. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த ரித்திக் ரோஷன் (வயது 18) என்ற இளைஞர் மாநாட்டுத் திடலில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார்.

பிறகு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

ஏற்கனவே, மதுரை தவெக மாநாட்டிற்காக விருதுநகரில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளை வரவேற்று பேனர் வைக்கும் போது காளீஸ்வரன் என்ற கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.. நேற்றைய தினம் 2 இளைஞர்கள் உயிரிழந்தது, மிகப்பெரிய அதிர்வலையை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தி வருகிறது.

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
Skip to content