அரசியல் இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

ட்ரம்பின் அமைதி திட்டம்: ஆஸ்திரேலியா கூறுவது என்ன? 

உக்ரைனுக்கான எந்தவொரு அமைதித் திட்டமும் புதிய பகுதியை ரஷ்யாவிடம் ஒப்படைப்பதாக அமையக்கூடாது என்று ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.

உக்ரைன், ரயா போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள அமைதித் திட்டத்துக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையிலேயே ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்பின் முன்மொழிவு குறித்து விவாதிக்க அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் உக்ரைன் உயர் அதிகாரிகள் ஜெனீவாவில் கூடியுள்ளனர்.

இதன்போது உக்ரைனின் இறையாண்மையை உறுதிப்படுத்தக்கூடிய வலுவான ஏற்பாடுகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே நான்கு ஆண்டுகாலம் நீடிக்கும் போரின் முடியாவது நீடித்த அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Saranya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
error: Content is protected !!