அமெரிக்காவை அச்சுறுத்த நினைத்தால் ஆபத்து – ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்

அமெரிக்காவை அச்சுறுத்த நினைத்தால், அதற்கான கடும் விளைவை ஈரான் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏமனில் இருந்து செயல்படும் ஹவூதிக்களுக்கு ஆதரவு அளிப்பதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவை அச்சுறுத்த நினைத்தால், அதற்கான கடும் விளைவை ஈரான் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் உத்தரவின் பேரில், ஹவூதிக்கள் மீது அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
சனா பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். ஹவூதிக்கள் தங்களது தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளாவிட்டால், நரகத்தை சந்திக்கவேண்டி இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக ஹவூதிக்கள் அறிவித்துள்ளனர்.