உலகம் செய்தி

ஈரானுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானுடன் தீவிர பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளா்ர்.

இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடையுமானால், ஈரானில் நடைபெற்று வரும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வரும் எனவும் அவர் கூறினார்.

புதிய ஆட்சி மிகவும் நியாயமானது எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், பேச்சுவார்த்தையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகலும் தெரிவித்துள்ளார்.

ஆனால், விரைவில் உடன்பாடு எட்டப்படாவிட்டாலே ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படாவிட்டாலோ, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் வளங்கள் உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கை கடந்த பல தசாப்தங்களில் ஈரான் நடவடிக்கைகளால் உயிரிழந்த அமெரிக்கர்களுக்கான பதிலடி எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!