ஒபாமாக்களை குரங்குகளாக சித்தரிக்கும் காணொளியை வெளிட்ட ட்ரம்ப் – உலக தலைவர்கள் கடும் கண்டனம்!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான , பராக் ஒபாமா மற்றும் அவரின் துணைவியார் மிஷெல் ஒபாமாவை குரங்குகளாக சித்திரிக்கும் காணொளி ஒன்றை ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.
இந்த காணொளி இனவெறியை வெளிப்படுத்துவதாக பரவலாக விமர்சிக்கப்பட்டு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு நிமிடம் நீளமான காணொளியின் முடிவில், முன்னாள் ஜனாதிபதி பராக் மற்றும் முன்னாள் முதல் பெண்மணி மிஷலின் முகங்கள் குரங்குகளின் உடல்களில் இணைக்கப்பட்டுள்ளன.
தி லயன் ஸ்லீப்ஸ் டுநைட் (The Lion Sleeps Tonight) என்ற பாடலுக்கு நடனமாடும் வகையில் அந்த காணொளி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ட்ரம்பின் இந்த செயலுக்கு பல தலைவர்கள் கடும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.
கலிபோர்னியாவின் ஜனநாயக ஆளுநரும், ஜனாதிபதியின் வெளிப்படையான விமர்சகருமான கேவின் நியூசம் (Gavin Newsom) எக்ஸ் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். “ஜனாதிபதியின் அருவருப்பான நடத்தை. ஒவ்வொரு குடியரசுக் கட்சியினரும் இதனை கண்டிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ட்ரம்பிற்கு எதிரான குடியரசுக் கட்சியினர் இந்த இடுகையை இனவெறி என்று கூறி, கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதேவேளை இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா தூதர் முகமது சஃபா (Mohamad Safa), சர்வதேசமாகவோ அல்லது உள்ளூர்மாகவோ, இனவெறி மற்றும் வெறுப்பைத் தூண்டும் இந்த வகையான பேச்சு இன்று நம் உலகில் ஏற்றுக்கொள்ள முடியாதது.
பாசிசம் மற்றும் இனவெறியின் அலையை பின்னுக்குத் தள்ளிய தலைமுறைகளுக்கு நாம் இனி வாரிசுகள் அல்ல.” எனக் குறிப்பிட்டுள்ளார்.





