உலகம் செய்தி

ஈரானுடன் பேச்சு: ட்ரம்ப், நெதன்யாகு கூட்டாக களத்தில்!

டொனால்ட் டிரம்ப் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரும் இணைந்து ஈரான் தொடர்பான பேச்சுவார்த்தைகளை கையாளுவதாக இஸ்ரேலிய அமைச்சர் Nir Barkat தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் முரண்பாடுகள் தென்பட்டாலும், இரு தலைவர்களும் ஒருமித்த நோக்கத்துடன் இந்த விவகாரத்தை அணுகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுடனான எந்தவொரு ஒப்பந்தமும் அந்த நாட்டின் அணுசக்தி மற்றும் ராணுவத் திறன்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பதே இவர்களின் முதன்மை இலக்காகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதேவேளை, பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், அமெரிக்கா தனது ராணுவ பலத்தை வளைகுடா பகுதியில் நிலைநிறுத்தி அழுத்தத்தைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

இந்த உத்தியானது ஈரான் மீதான பிடியைத் தளர்த்தாமல், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குச் சாதகமான முடிவுகளை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என நிபுணர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!