டிரம்ப் – கிம் சந்திப்பு ; 2026இல் நடக்க அதிக வாய்ப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான சந்திப்பு அடுத்த ஆண்டு நடைபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக சர்வதேச ரீதியில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிரம்ப், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது கிம்முக்கும் டிரம்புக்கும் இடையே சந்திப்பு நடைபெற வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், அச்சந்திப்பு சீனாவில் நடைபெற வாய்ப்புகள் இல்லை என்றும் கடந்த முறை போன்று வடகொரிய, தென்கொரிய எல்லை நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.





