உலகம் செய்தி

ஈரான் மறுப்பு: பேச்சு நடக்கிறது என ட்ரம்ப் மீண்டும் தெரிவிப்பு! 15 அசம் திட்டம் முன்வைப்பு!

ஈரான் உடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவர இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் தரப்பு மேற்படி தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள போதிலும், ஒரு பெரிய ஒப்பந்தத்தை எட்டுவதற்குத் தாங்கள் சரியான நபர்களுடன் பேசி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அணுசக்தி திட்டத்தைக் கைவிடுதல் மற்றும் கடல்வழிப் பாதைகளைத் திறத்தல் போன்ற பதினைந்து அம்சங்கள் அடங்கிய திட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவது போரை நிறுத்துவதில் பெரும் நிச்சயமற்ற நிலையை உருவாக்கியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான உடன்படிக்கைகள் எட்டப்பட வாய்ப்புள்ளதாகத் தோன்றினாலும், களத்தில் ராணுவ நடவடிக்கைகள் இன்னும் தீவிரமாகவே உள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!