ஐரோப்பிய நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்க தயாராகும் ட்ரம்ப்!
கிரீன்லாந்தை அமெரிக்க ஆதிக்கத்தில் இருந்து பாதுகாக்க விரும்பும் ஐரோப்பிய நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கப்போதுவாக ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.
முன்னதாக கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றும் வரை முதல் கட்டமாக 10 சதவீத வரியும், பின்னர் ஜுன் மாதத்தில் இருந்து 25 சதவீத வரியும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய தலைவர்கள் அவசர கூட்டத்தை நடத்தியிருந்தனர். இதில் அமெரிக்கா மீது 90 சதவீத வரி விதிக்க பரிசீலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ட்ரம்ப் தற்போது புதிய வரி விதிப்பை அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், கிரீன்லாந்தின் எதிர்காலத்தை அந்நாட்டு மக்களும் டேனிஷ் மக்களுமே தீர்மானிக்க வேண்டும் என பிரித்தானியாவின் வெளியுறவுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கிரீன்லாந்தின் இறைமை மீது அமெரிக்க ஜனாதிபதியால் செல்வாக்குச் செலுத்த முடியாது என டென்மார்க் வெளியுறவுச் செயலாளர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





