குடியேற்ற வழக்குகளை விசாரணை செய்ய FBI முகவர்களை நியமித்த ட்ரம்ப்!
அமெரிக்காவில் குடியேற்ற வழக்குகளை விசாரணை செய்வதற்காக ட்ரம்ப் நிர்வாகம் மீளவும் ஆயிரக்கணக்கான FBI முகவர்களை நியமித்துள்ளது.
இந்நடவடிக்கையானது FBI முகவர்களை வழக்கான பணிகளில் இருந்து திசைத் திரும்பும் வகையில் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், FBI சுமார் 1,500 முகவர்களை வொஷிங்டன், D.C.க்கு வெளியே இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பணியகத்தின் மிகவும் பொதுவான குற்ற எதிர்ப்பு மற்றும் தேசிய பாதுகாப்புப் பணிகளை விட, குடியேற்றம் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்ய ஏறக்குறைய 40 சதவீதமானோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாற்றங்களால் சீனா மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளின் உளவு முயற்சிகளைத் தடுப்பது போன்ற எதிர் உளவுத்துறைப் பணிகளைச் சமாளிக்க FBI பணியகம் போதுமான அதிகாரிகளை கொண்டிருக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
FBI எதிர் புலனாய்வுத் துறையின் முன்னாள் தலைவர் ரொபர்ட் ஆண்டர்சன் (Robert Anderson) நிலைமையை ‘பேரழிவு’ என்று விவரித்துள்ளார்.
இந்த மாற்றம் அமெரிக்காவின் எதிர் புலனாய்வு திறன்களை கடுமையாக பலவீனப்படுத்துகின்றன என்று முன்னாள் உயர் FBI முகவர்கள் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





