தென்கொரியாவில் சந்திக்கும் ட்ரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் ( Xi Jinping)!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ( Xi Jinping) இடையேயான சந்திப்பு நாளை நடைபெறும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சந்திப்பு தென் கொரியாவின் பூசானில் (Busan) நடைபெற உள்ளது.
இந்த மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் சீனத் தலைவர்களுக்கு இடையே சந்திப்பொன்று திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் (Scott Besant) முந்தைய சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க மற்றும் சீன அதிபர்களுக்கு இடையிலான சந்திப்பை சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று (29) உறுதிப்படுத்தினார்.
மேலும் அமெரிக்க-சீன உறவுகள் மற்றும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு அமெரிக்க அதிபரும் சீன அதிபரும் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
சமீபகாலமாக இடம்பெற்ற வரி விதிப்பு நடவடிக்கைகள் இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.





