பொழுதுபோக்கு

முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து அடுத்த ரவுண்டுக்குத் தயாராகி வரும் த்ரிஷா!

சினிமாவில் இப்போது முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து அடுத்த ரவுண்டுக்குத் தயாராகி வருகிறார் நடிகை த்ரிஷா.

தென்னிந்திய திரையுலகில் இருபது வருடங்களுக்கும் மேலாக ரசிகர்களுக்குப் பிடித்த நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. நாற்பது வயதை நெருங்கி விட்டாலும் இப்போதும் அவருக்கு மார்கெட் குறையவில்லை. ‘96’ படம் மூலம் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கினார் த்ரிஷா. இது ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவை கதாபாத்திரம் மூலம் உச்சம் பெற்றது என்றே சொல்லலாம். அதற்கடுத்து நடிகர் விஜயுடன் அவர் ஜோடி போட்ட ‘லியோ’ படத்திலும் விஜய்-த்ரிஷா ஜோடி ரசிக்கப்பட்டது. இப்போது மீண்டும் முன்னணி நடிகர்களின் ஜோடியாக ஹிட் லிஸ்ட்டில் வலம் வருகிறார் த்ரிஷா.

Trisha Krishnan News: Latest Trisha Krishnan News and Updates at News18

விஜயைப் போலவே நடிகர் அஜித்தும் த்ரிஷாவின் நண்பர்தான். அஜித்துடன் மீண்டும் ‘விடாமுயற்சி’ படத்தில் இணைவது குறித்துத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதன் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதற்கிடையில் ‘தக் லைஃப்’ படம் மூலமாக நடிகர் கமலுடன் மூன்றாவது முறை இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பில் த்ரிஷா தற்போது பிஸியாக உள்ளார். இதுமட்டுமல்லாது, மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக ஒரு படத்திலும், டோவினோ தாமஸ் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Trisha (actress) - Wikipedia

இந்தப் படங்களோடு தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்கும் ‘விஸ்வம்பரா’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இவர்கள் இருவரும் 18 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்து நடிக்க உள்ளனர். இப்படி அஜித், கமல்ஹாசன், மோகன்லால், சிரஞ்சீவி என சீனியர் மோஸ்ட் நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ள த்ரிஷா 63 வயதிலும் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் வெங்கடேஷூடன் புதிய படம் ஒன்றில் இணைகிறாராம். இப்படத்தை அனில் ரவிப்புடி இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content