திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: சந்தேக நபர்களுக்கு மறியல் நீடிப்பு!
பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள் மற்றும் மேலும் 6 சந்தேகநபர்களுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் புத்தர் சிலையொன்றை அகற்றுவதற்கு முற்பட்ட சம்பவத்தின்போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையிலேயே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்று (02) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது,
சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, குறித்த குழுவினரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




